பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேர் இறந்தனர்.விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி, 70; விவசாயி. இவர், நேற்று மாலை 3:30 மணிக்கு, தனது நிலத்தில் நடந்து சென்றார். அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி, இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், பக்கிரிசாமி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேர் இறந்தனர்.விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி, 70; விவசாயி. இவர், நேற்று மாலை 3:30 மணிக்கு, தனது நிலத்தில் நடந்து சென்றார்.

அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி, இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், பக்கிரிசாமி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்விழுப்புரம் அடுத்த சின்னகள்ளிப்பட்டை சேர்ந்தவர் பிரபு, 38; இவர்,

நேற்று மாலை 4:30 மணியளவில் நிலத்தில் நடந்து சென்றார். அப்போது, மின் மோட்டாருக்கு செல்லும் மின்சார ஒயரில் கால் பட்டு மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தில், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X