பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு தொந்தரவு: வாலிபர் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
மயிலம் : மயிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபிரகாஷ் 22. இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, மொபைல் போன் மூலம் தொந்தரவு கொடுத்துடன், அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.சிறுமியின் உறவினர்கள் 6

மயிலம் : மயிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபிரகாஷ் 22. இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, மொபைல் போன் மூலம் தொந்தரவு கொடுத்துடன், அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.

சிறுமியின் உறவினர்கள் 6 மாதங்களுக்கு முன், ஜெயப்பிரகாஷை கண்டித்தனர். கடந்த 6 நாட்களுக்கு முன், ஜெயபிரகாஷ் சிறுமிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.இதில் மனமுடைந்த சிறுமி 21ம் தேதி விஷம் குடித்து ஆபத்தான நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து. ஜெயப்பிரகாஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X