பொது செய்தி

தமிழ்நாடு

ஜெய்பீம் படக் குழுவினருக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சிதம்பரம் : ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என, வன்னியர் சங்கம் எச்சரித்துள்ளது.ஜெய்பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, நேற்று சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது:அக்னி கலசத்தை ஜெய்பீம் படத்தில் காலண்டரில் காட்டியது தவறானது. அப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் பெயரை

சிதம்பரம் : ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என, வன்னியர் சங்கம் எச்சரித்துள்ளது.ஜெய்பீம் படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, நேற்று சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:அக்னி கலசத்தை ஜெய்பீம் படத்தில் காலண்டரில் காட்டியது தவறானது. அப்படத்தில் சப் இன்ஸ்பெக்டர் பெயரை குருமூர்த்தி என பெயரிட்டு, குரு என அழைத்து மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்பிரச்னைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியும், படக்குழுவினர் அலட்சியப்படுத்தினர்.

நடிகர் சூர்யா கொடுத்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. படத்தின் இயக்குனர் வன்னியர் சங்கத்திடம் நேரடியாக மன்னிப்பு கேட்காமல் பொதுவாக மன்னிப்பு கேட்கிறார். இதை ஏற்க முடியாது. காலண்டரில் வருடம் தெரிய, அக்னி கலசத்தை போடுவதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை. வன்னியர்களை கொலை குற்றவாளியாக பழி சுமத்துவது முற்றிலும் தவறு.

ஜெய்பீம் படக்குழுவினரை யாரோ வெளியில் இருந்து இயக்குகிறார்கள். அதனால் தான் அவர்கள் முறையாக மன்னிப்பு கேட்கவில்லை. தமிழகம் முழுதும் பல இடங்களில் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். முறையான மன்னிப்பு கேட்காவிட்டால் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X