பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து பா.ம.க.,வினர் மறியல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் போலீசாரை கண்டித்து பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் பழையூரை சேர்ந்த தனசங்கு மகன் சிவா, 36; வெளிநாட்டில் வேலை பார்த்தவர். இவர் சில தினங்களுக்கு முன் சமட்டிக்குப்பம் பகுதியில் த.வா.க., கொடி கம்பத்தை சேதப்படுத்தியதாக குள்ளஞ் சாவடி போலீசார் நேற்று அதிகாலை கைது

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடியில் போலீசாரை கண்டித்து பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் பழையூரை சேர்ந்த தனசங்கு மகன் சிவா, 36; வெளிநாட்டில் வேலை பார்த்தவர். இவர் சில தினங்களுக்கு முன் சமட்டிக்குப்பம் பகுதியில் த.வா.க., கொடி கம்பத்தை சேதப்படுத்தியதாக குள்ளஞ் சாவடி போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

அவரை கைது செய்தது குறித்து பா.ம.க.,வினர் கேட்டும் போலீசார் பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பகல் 12.30 மணிக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் முன்பு, கடலுார்-சேலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தயதையடுத்து 1 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

இதனிடையே பா.ம.க., - த.வா.க.,கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. நெய்வேலி டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், நேற்று குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் முகாமிட்டு மோதல் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் குள்ளஞ்சாவடி பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X