சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன், சிறுமி மர்ம சாவு கள்ளக்குறிச்சியில் விசாரணை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே பேரன் சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுவனின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 16 வயது சிறுவன், சிறுமி. இருவரும் அதே பகுதியில் உள்ள

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே பேரன் சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுவனின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 16 வயது சிறுவன், சிறுமி. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.கடந்த 20ம் தேதி இரவு 7 மணியளவில் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.சிறுவன் மீது சந்தேகம் உள்ளதாக சிறுமியின் பெற்றோர் கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் 21ம் தேதி புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ள வேப்பமரத்தில், சொட்டு நீர்பாசன பைப்பில் துாக்கில் தொங்கியவாறு, அழுகிய நிலையில் சிறுவன் சடலம் இருந்தது. சிறுவன் இறந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் தண்ணீரில் கரை ஒதுங்கியது.கள்ளக்குறிச்சி ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, ஆனந்தராஜ் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.கடந்த 20ம் தேதி மாயமான குதிரைச்சந்தலை சேர்ந்த சிறுவன், சிறுமி என்பது உறுதியானது.

இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது கொலை செய்யப்பட்டார்களா என கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். தாத்தா சீனுவாசன் சிறுவனை வளர்த்து வந்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே சிறுவனின் தாத்தா சீனுவாசன், தனது பேரன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X