சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்றத்து திருக்குளத்தில் இடிந்து விழும் சுவர்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்தகுள (திருக்குளம்) உள்பகுதி சுவர்கள் இடிந்து வருகின்றன.இக்குளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் கருங்கற்களால் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கு பகுதி மூலை சுவரின் ஒரு பகுதி நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. நேற்று முன் தினம் குளத்தின் வடகிழக்கு பகுதி மூலையில் உள்ள
 குன்றத்து திருக்குளத்தில் இடிந்து விழும் சுவர்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்தகுள (திருக்குளம்) உள்பகுதி சுவர்கள் இடிந்து வருகின்றன.இக்குளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் கருங்கற்களால் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கு பகுதி மூலை சுவரின் ஒரு பகுதி நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது.

நேற்று முன் தினம் குளத்தின் வடகிழக்கு பகுதி மூலையில் உள்ள சுவர் 70 அடி அகலத்திற்கு இடிந்து விழுந்தது. நேற்று காலை தென்கிழக்கு பகுதி மூலையிலுள்ள சுவரின் ஒரு பகுதி 50 அடி நீளம் இடிந்து விழுந்தது. தினமும் சுவர் இடிந்து விழுவதால் குளத்தின் அருகே குடியிருப்பவர்களும், குளத்தின் அருகிலுள்ள பள்ளி குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனர். குளத்திலுள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி மீண்டும் உட்புற சுவரை கட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X