தமிழ்நாடு

ரூ.ஆயிரம் கோடியில் மதுரையை விரிவுபடுத்த திட்ட அறிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை: ''ரூ.ஆயிரம் கோடியில் மதுரை நகரையை 25 கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளது,'' என, மதுரையில் நடந்த மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.எம்.பி.,வெங்கடேசன் தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ரவீந்திரநாத்குமார், மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தனர்.

மதுரை: ''ரூ.ஆயிரம் கோடியில் மதுரை நகரையை 25 கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளது,'' என, மதுரையில் நடந்த மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

எம்.பி.,வெங்கடேசன் தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ரவீந்திரநாத்குமார், மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், பெரியபுள்ளான், ஐயப்பன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதா ஹனீப், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் நிதியில் மதுரையில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்ப, அதிகாரிகள் பதிலளித்தனர்.எம்.பி., குற்றச்சாட்டுரவீந்திரநாத்குமார் பேசுகையில், உசிலம்பட்டியில் முன்னாள் எம்.பி., நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அருகிலுள்ள கழிப்பறை திறக்கப்படவில்லை. மேலும் ஐந்து உயர் மின்ேகாபுரங்கள் பராமரிக்கப்படவில்லை,'' என்றார்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிலம் ஒதுக்கீடு தாமதம் என்ற கருத்து வெளியானது தவறு. நிலத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஜமைக்கா நிறுவனம் கடனுதவி வழங்குகிறது.

இங்குள்ள எம்.பி.,க்கள் கவனம் செலுத்தி கட்டுமான பணிகளை விரைந்து துவங்க வேண்டும்,'' என்றார்.பொலிவான நகராகும்கூட்ட முடிவில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: மதுரை மாவட்ட வளர்ச்சி, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆளுங்கட்சி என பாராமல் மக்கள் பிரதிநிதிகள் ஒருமித்த கருத்துடன் 6 மணி நேரம் விவாதித்தோம். முந்தைய ஆட்சியில் நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் 70 சதவீதம் பணி முடிந்து விட்டது. அதிலிருந்த சில தவறுகளை திருத்தி துரிதப்படுத்தியதால் தற்போது 95 சதவீதம் முடிந்துள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறக்கவுள்ளார்.

நகரில் சாலை அமைக்க ரூ.60 கோடி ஒதுக்க முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத பகுதியில் பணி நடக்கிறது. ஐந்தாண்டில் மதுரை பொலிவான நகராகும் என்றார்.அதிகாரிகள் ஆப்சென்ட்கூட்டம் துவங்கியதும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் இல்லை. மாநில நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட சில துறை அதிகாரிகள் இல்லாததால் மக்கள் பிரதிநிதிகள் கேள்விக்கு கீழ்நிலை அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை. வரும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X