போக்குவரத்து அபராதத்தை செலுத்தாமல் போலீசாரை ஏமாற்றும் வாகன ஓட்டிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து அபராதத்தை செலுத்தாமல் போலீசாரை ஏமாற்றும் வாகன ஓட்டிகள்

Added : நவ 24, 2021
Share
மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தாமல் போலீசாரை சில வாகன ஓட்டிகள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.சிக்னலை மதிக்காதது, ெஹல்மெட் அணியாதது, அதிவேகம், அதிக பாரம் உட்பட போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். சமீபகாலமாக வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன பதிவெண்ணை ஆய்வு செய்து அபராத தொகை செலுத்த எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தாமல் போலீசாரை சில வாகன ஓட்டிகள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.சிக்னலை மதிக்காதது, ெஹல்மெட் அணியாதது, அதிவேகம், அதிக பாரம் உட்பட போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். சமீபகாலமாக வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன பதிவெண்ணை ஆய்வு செய்து அபராத தொகை செலுத்த எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. சில நேரம் வெளியூர் மாவட்டத்தில் இருந்தும் கூட அபராதம் செலுத்த எஸ்.எம்.எஸ்., வருகிறது. இந்நிலையில் அபராதம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் சிலர் போலீசாரை ஏமாற்றி வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இ சலான் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. சில நேரம் போலீசார் தவறுதலாக பதிவெண்ணை குறிப்பிடும்போது வெளியூர்காரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., செல்கிறது. அப்படி வந்தால் அருகில் உள்ள போலீஸ்காரரை தொடர்பு கொண்டால் அவர் அதை ரத்து செய்ய ஏற்பாடுகளை செய்வார்.தற்போது அபராதம் செலுத்த கூகுள் பே, பே டிஎம் போன்ற ஆன்லைன் வசதி உள்ளது. அபராதம் செலுத்தாதவர்கள் மீண்டும் போக்குவரத்து விதிமீறும்போது தெரிந்துவிடும். அப்போது அவர்கள் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X