கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகளிர் இலவச அரசு பஸ்கள் 'கட்' குழப்பம் ஏற்படுத்தும் 'ரெட் ஸ்டிக்கர்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை மதுரையில் இயக்கப்படும் மகளிருக்கான அரசு இலவச பஸ் எண்ணிக்கை மதியத்திற்கு பிறகு பாதியாக குறைக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு போக்குவரத்து கழக 18 கிளைகளிலும் 40 சதவீத்திற்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்கள் மகளிர் இலவச பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. மதியத்துக்கு பிறகு பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க

மதுரை மதுரையில் இயக்கப்படும் மகளிருக்கான அரசு இலவச பஸ் எண்ணிக்கை மதியத்திற்கு பிறகு பாதியாக குறைக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.அரசு போக்குவரத்து கழக 18 கிளைகளிலும் 40 சதவீத்திற்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்கள் மகளிர் இலவச பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. மதியத்துக்கு பிறகு பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஓட்டுனர், நடத்துனர்களின் பணி மாற்றமான மதியம் 1:30 - 2:30 மணிக்கு பின் 50 சதவீதம் பஸ்கள் குறைக்கப்படுகின்றன. இரவு 7:00 மணிக்கு பிறகு சில வழித்தடங்களில் பெயருக்கு இலவச பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பயணிகள் கூறியதாவது: மகளிர் இலவச பஸ்களை பார்த்தவுடன் கண்டுபிடித்து ஏறும் வகையில் தனி கலர் இல்லை.'மகளிருக்கு இலவச பயணம்' என்ற ஸ்டிக்கரும், 'டீசல் சிக்கனம் தேவை இக்கணம்' என்ற ஸ்டிக்கரும் சிவப்பு நிறத்தில் ஒரே அளவில் ஒட்டப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X