பொது செய்தி

இந்தியா

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது 'போயிங் மேக்ஸ்' விமானம்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'போயிங் 737 மேக்ஸ்' விமானம், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது. முதல் விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவைச் சேர்ந்த 'போயிங்' நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் ரக விமானம், 2019ல் எத்தியோப்பியாவில்
SpiceJet, Boeing 737 MAX, plane, aircraft

புதுடில்லி: சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'போயிங் 737 மேக்ஸ்' விமானம், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது. முதல் விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 'போயிங்' நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் ரக விமானம், 2019ல் எத்தியோப்பியாவில் விபத்தில் சிக்கியது. அதில், நான்கு இந்தியர் உட்பட, 157 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த வகை விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த வகை விமானத்தை நம் நாட்டில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.


latest tamil news



தனியார் விமான நிறுவனமான, 'ஸ்பைஸ்ஜெட்', இந்த வகை, 205 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், 13 விமானங்கள் வந்து சேர்ந்து, பயன்பாட்டில் இருந்தன. இந்த வகை விமானத்துக்கான தடையை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அதையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்படி டில்லியில் இருந்து குவாலியருக்கு நேற்று முதல் விமானம் இயக்கப்பட்டது.


latest tamil news


இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனர் அஜய் சிங், போயிங் இந்தியா தலைவர் சலைல் குப்தா உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
24-நவ-202121:36:54 IST Report Abuse
elakkumanan ஸ்பைஸ் ஜெட் ஒரு குடிசை தொழில் ....எனவே, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அனுமதி உதவும் என்று பிச்சை அரசின் தலைவர், மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் அதானி குழுமத்தின் கார்பொரேட் கலாச்சாரத்தை கண்டித்து நவம்பர் முப்பத்தி ஆறாம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளார்.. இருநூறு ரூவாய் உப்பிஸ் மற்றும் சொந்த பெயரில்லா அடிமைகள், மேற்கண்ட தினத்தில் கார்பொரேட் க்கு எதிரான போராட்டத்தில் முழுமூச்சாக கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.. சொந்த மூளை எதுவும் இல்லாத காரணத்தால், மேற்படி கும்பல், கும்பலாக வரும் என்று அதிகாரபூர்வ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
24-நவ-202115:37:28 IST Report Abuse
தத்வமசி ஸ்பைஸ் ஜெட் நம்ம ஊரு ஏழையின் விமான கம்பெனி இல்லையா ? யாரு அந்த அப்பா டக்கரு ?
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
24-நவ-202112:58:20 IST Report Abuse
R MANIVANNAN பிஜேபி அரசு ஏன் அனுமதி கொடுக்க வேண்டும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X