பொது செய்தி

தமிழ்நாடு

முதலாம் ஆண்டுக்கு நேரடி வகுப்பு எப்போது ?

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : 'அண்ணா பல்கலை வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சில வாரங்களில் நேரடி வகுப்புகள் துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை நுாலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளில் சில வாரங்களில் நேரடி

சென்னை : 'அண்ணா பல்கலை வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சில வாரங்களில் நேரடி வகுப்புகள் துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை நுாலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளில் சில வாரங்களில் நேரடி வகுப்புகள் துவங்கப்படும். தமிழ் வழியில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்கள் பாடங்களை உள்வாங்கி படிக்கின்றனர். எனவே தாய்மொழி கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்களின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய ஒரு தாளுக்கு 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X