கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை சிறையில் நிதி முறைகேடு ஐகோர்ட்டில் தாக்கலான வழக்கு வாபஸ்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : மதுரை மத்திய சிறையில் எழுது பொருட்கள் சப்ளை செய்ததில் நடந்துள்ள நிதி முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.சிறைவாசிகள் உரிமை அமைப்பின் இயக்குனரும் வழக்கறிஞருமான புகழேந்தி தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் எழுது பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசின் பல்வேறு துறைகளுக்கு இங்கிருந்து

சென்னை : மதுரை மத்திய சிறையில் எழுது பொருட்கள் சப்ளை செய்ததில் நடந்துள்ள நிதி முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

சிறைவாசிகள் உரிமை அமைப்பின் இயக்குனரும் வழக்கறிஞருமான புகழேந்தி தாக்கல் செய்த மனு:
தமிழக சிறைகளில் எழுது பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசின் பல்வேறு துறைகளுக்கு இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளாக எழுது பொருட்கள் சப்ளை செய்ததில் மதுரை மத்திய சிறையில் பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.கடந்த 2019 ஜூன் முதல் 2021 ஜூன் வரை 30 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. பொது மக்கள் பணத்தில் நடந்துள்ள முறைகேட்டை கணக்கிட்டால் 100 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இருக்கும்.

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு மனு அனுப்பினேன். சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எழுது பொருட்கள் சப்ளையில் நடந்துள்ள முறைகேடு குறித்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினார்.இதையடுத்து முறையான ஆய்வுக்கு பின்னரே பொதுநல வழக்கு தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகவும் முழுமையான ஆதாரங்களுடன் புதிதாக மனு தாக்கல் செய்யலாம் என்றும் முதல் பெஞ்ச் தெரிவித்தது.

மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததால் அதை தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X