பொது செய்தி

தமிழ்நாடு

'பாலியல் தொல்லை பிரச்னையில் புகாருக்காக காத்திருக்காதீங்க!'

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : 'பாலியல் பிரச்னை குறித்து தகவல் வந்தால், உடனே அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்; புகார் தரும் வரை காத்திருக்கக் கூடாது' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறையின் சி.இ.ஓ.,க்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நேற்று நடந்தது.பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலை

சென்னை : 'பாலியல் பிரச்னை குறித்து தகவல் வந்தால், உடனே அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்; புகார் தரும் வரை காத்திருக்கக் கூடாது' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் சி.இ.ஓ.,க்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நேற்று நடந்தது.பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலை மையில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் 38 மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, அதிகாரிகளுக்கு அரசின் திட்டங்களை விளக்கினார்.

அத்துடன், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் விபரம்:

 இல்லம் தேடி கல்வி திட்டம், முதல்வரின் நேரடி திட்டம் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்து, சிறப்பாக செயல்படுத்த வேண்டும். திட்ட செயல்பாட்டில் விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 பொது தேர்வுக்கான விபரங்களை சரியாக பதிவு செய்து, எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தலாம்.

 ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பாக அரசாணை வந்தால், அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தேவையற்ற இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது.

 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான, ஆசிரியர்களின் நியமன அனுமதிக்கு, உரிய நீதிமன்ற உத்தரவு மற்றும் இயக்குனரக விதிகளை பின்பற்ற வேண்டும். நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 பாலியல் பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஒழுக்க நெறி பயிற்சி அளிக்க வேண்டும். போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

 பள்ளிகள், வகுப்பறைகளில், 1098 மற்றும் 14417 என்ற உதவி எண்களை, அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். பாலியல் ரீதியாக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகளுக்கு பிரச்னை இருப்பது, யார் வாயிலாக தெரியவந்தாலும், புகார் வர வேண்டும் என காத்திருக்க கூடாது. உடனடியாக பொறுப்புணர்வுடன் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X