சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவிலில் சிலை திருட்டு

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருச்சி : துவரங்குறிச்சி அருகே, பழமையான கோவில் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே, பழையபாளையத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், 850 ஆண்டுகளுக்கு முன் விக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.நேற்று முன்தினம், வழக்கமான பூஜைகள் முடிந்து, கோவில் அர்ச்சகர் கார்த்திகேயன் கோவிலை பூட்டி விட்டு,

திருச்சி : துவரங்குறிச்சி அருகே, பழமையான கோவில் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே, பழையபாளையத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், 850 ஆண்டுகளுக்கு முன் விக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.நேற்று முன்தினம், வழக்கமான பூஜைகள் முடிந்து, கோவில் அர்ச்சகர் கார்த்திகேயன் கோவிலை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலையில், மீண்டும் அவர் கோவிலுக்கு சென்ற போது, கோவிலுக்கு வெளியே பிரதிஷ்டை செய்திருந்த மூன்று அடி உயர சண்டிகேஸ்வரர் சுவாமி சிலை காணாமல் போய் இருந்தது. மர்ம நபர்கள், விநாயகர் சிலையையும் திருடிச் செல்ல முயற்சி செய்திருந்தனர். அர்ச்சகர் கார்த்திகேயன் கொடுத்த புகார்படி, துவரங்குறிச்சி போலீசார், சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்தனர். சுவாமி சிலை திருட்டு சம்பவம் குறித்து, துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X