அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் இதயத்தில் இடம்பிடித்த கோவை!

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை : சென்னையில் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியை, கோவையில் நடத்தி, தொழில்துறையினரின் கவனத்தை , தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈர்த்திருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதியிலும் தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. இருந்தபோதிலும், கொரோனா தொற்று பரவிய காலத்தில் இரண்டு முறை வந்த ஸ்டாலின்,



கோவை : சென்னையில் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியை, கோவையில் நடத்தி, தொழில்துறையினரின் கவனத்தை , தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈர்த்திருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதியிலும் தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. இருந்தபோதிலும், கொரோனா தொற்று பரவிய காலத்தில் இரண்டு முறை வந்த ஸ்டாலின், மருத்துவ சேவையை தீவிரப்படுத்தினார்.தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், மக்களை நேரடியாக சந்திக்கும் பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

அதில், மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்; தொழில்களை மீட்டெடுக்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்; அதேநேரம், கட்சியையும் கட்டுக்கோப்புடன் வளர்க்க வேண்டும். அரசால் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என திட்டமிட்ட முதல்வர், மாவட்ட பொறுப்பாளராக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார்.

வார்டு வார்டாக 'மக்கள் சபை' நிகழ்ச்சிநடத்தி ஒரு லட்சத்து, 41 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில், முதல்கட்டமாக, 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், வ.உ.சி., மைதானத்தில் விழா நடத்தி, ரூ.646.61 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வராக கருணாநிதி இருந்தபோது அறிவித்த செம்மொழி பூங்கா திட்டம்; திட்டச்சாலை உருவாக்குதல்; பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய திட்டம், 15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவமனை என்கிற வீதத்தில், கோவை மாநகராட்சியில் வார்டுக்கு ஒன்று வீதம், 63 இடங்களில் மருத்துவ நல மையங்கள், 3 மருத்துவ ஆய்வு கூடங்கள் கட்டப்படும் என அறிவித்த ஸ்டாலின், விரைவில் அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி, திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என, உறுதியளித்திருக்கிறார். இது, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கிடைக்க வழிவகுக்கும் என்பதால், மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

சென்னையில் நடத்தப்படும் தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த உத்தரவிட்டார். இது, தொழில்துறையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.இதன் மூலம் கோவை அவரது இதயத்தில் தனியிடம் இருப்பது தெரியவருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X