அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏலகிரியில் புத்துணர்ச்சி முகாம் தமிழக காங்., ஆலோசனை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறுவது குறித்தும், ஏலகிரி மலையில் தேசிய புத்துணர்ச்சி முகாம் நடத்துவது குறித்தும், மாநில நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார்.அகில இந்திய காங்கிரஸ் சார்பில் தேசிய புத்துணர்ச்சி முகாம் என்ற தலைப்பில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கும்



சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறுவது குறித்தும், ஏலகிரி மலையில் தேசிய புத்துணர்ச்சி முகாம் நடத்துவது குறித்தும், மாநில நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அகில இந்திய காங்கிரஸ் சார்பில் தேசிய புத்துணர்ச்சி முகாம் என்ற தலைப்பில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கும் பயிலரங்கத்தை, மாநில வாரியாக நடத்த வேண்டும் என, முன்னாள் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் சார்பில், மாநில அளவில் மூன்று கூட்டங்களும், மாவட்ட அளவில் இரண்டு கூட்டங்களும், வட்டார அளவில் ஒரு கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுளளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.என்.முருகானந்தம், கீழானுார் ராஜேந்திரன், வசந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், டிசம்பர் அல்லது ஜனவரியில், ஏலகிரியில் தேசிய புத்துணர்ச்சி முகாம் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

1ம் தேதி விருப்ப மனு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், சென்னையை சேர்ந்த எட்டு மாவட்டத் தலைவர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார் . இது குறித்து, அழகிரி அறிக்கை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பகிறவர், டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் விருப்ப மனுக்களை வழங்க வேண்டும்.பொது பிரிவினர் 1,000 ரூபாயும், பட்டியலினத்தவர் மற்றும் மகளிர் 500 ரூபாயும் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை வழங்க வேண்டும்.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு வழங்கலாம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X