இன்ஸ்பெக்டரை அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டரை அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Added : நவ 24, 2021 | கருத்துகள் (3)
Share
கோவை : பைக் திருடனை துரத்தி பிடித்த இன்ஸ்பெக்டர் மாதையனை, நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.கோவை மாவட்டம், சூலூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மாதையன். இவர் கடந்த, 14 ம்தேதி அதிகாலை 3.-00 மணிக்கு நீலம்பூர் பகுதியில், போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் சென்ற இருவரை நிறுத்தி விசாரிக்கும் போது, அவர்கள் தப்பி
 இன்ஸ்பெக்டரை அழைத்து  பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்


கோவை : பைக் திருடனை துரத்தி பிடித்த இன்ஸ்பெக்டர் மாதையனை, நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
கோவை மாவட்டம், சூலூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மாதையன். இவர் கடந்த, 14 ம்தேதி அதிகாலை 3.-00 மணிக்கு நீலம்பூர் பகுதியில், போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் சென்ற இருவரை நிறுத்தி விசாரிக்கும் போது, அவர்கள் தப்பி ஓடினர்.இன்ஸ்பெக்டரும், போலீசாரும் ஒரு கி.மீ., தூரம் துரத்தி சென்று, ஒருவனை பிடித்தனர். தலைமறைவான மற்றொருவன், மறுநாள் பிடிபட்டான். அவர்கள் இருவரும், பைக் திருடர்கள் என, விசாரணையில் தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சூலுார் இன்ஸ்பெக்டரின் வீர, தீர செயலைப்பற்றி, உயர் போலீஸ் அதிகாரிகள், நேற்று முன்தினம் கோவை வந்த முதல்வரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை இன்ஸ்பெக்டர் மாதையனை நேரில் அழைத்து, பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

''பைக் திருடர்களை, உயிருக்கு அஞ்சாமல் போராடி பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம், மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள். உங்களின் துணிச்சலான செயல்பாடு, காவல் துறையில் உள்ள நேர்மையான, துணிச்சலான அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்,'' என,முதல்வர் வாழ்த்தினார்.

சட்டம் -- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., தாமரைக்கண்ணன், கோவை மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X