சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியை சேர்ந்த தாய், மகன் தற்கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர் : கோத்தகிரியை சேர்ந்த தாயும், மகனும் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் நாகராஜ், 50; மனைவி ராதா, 45. தம்பதிகளின் ஒரே மகன் நிரஞ்சன், 22, ஐ.டி., பட்டதாரி. இவர்கள், திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் விவேகானந்தர் வீதியில் வசித்து வந்தனர்.இதில், நாகராஜ், கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால்,
 கோத்தகிரியை சேர்ந்த  தாய், மகன் தற்கொலை


திருப்பூர் : கோத்தகிரியை சேர்ந்த தாயும், மகனும் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் நாகராஜ், 50; மனைவி ராதா, 45. தம்பதிகளின் ஒரே மகன் நிரஞ்சன், 22, ஐ.டி., பட்டதாரி. இவர்கள், திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் விவேகானந்தர் வீதியில் வசித்து வந்தனர்.இதில், நாகராஜ், கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், ராதா பனியன் நிறுவனத்திலும், நிரஞ்சன், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்தார். நாகராஜ், இறந்த வருத்தத்தில் தாயும், மகனும் இருந்து வந்தனர்.இச்சூழலில், நேற்று இருவரும் வீட்டின் ஒரே அறையில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்து கொள்ளும் முன், நிரஞ்சன் எழுதிய கடிதத்தில், 'அப்பா இல்லாத உலகத்தில் வாழ விரும்பவில்லை,' என குறிப்பிட்டுள்ளார்.அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரது சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X