ஜி.எச்.,ல் ஆக்சிஜன் இல்லையா; சப்-கலெக்டர் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எச்.,ல் ஆக்சிஜன் இல்லையா; சப்-கலெக்டர் விசாரணை

Added : நவ 24, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் கிடைப்பதில்லை, என்ற புகாருடன், வெளியான வீடியோ குறித்து, சப் - கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு தனியாக உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஒரு நோயாளி, 'ஆக்சிஜன் வழங்கப்படவில்லை. இங்கு வழங்கப்பட்ட கருவியும் பயன்படாமல் உள்ளது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் கிடைப்பதில்லை, என்ற புகாருடன், வெளியான வீடியோ குறித்து, சப் - கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு தனியாக உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஒரு நோயாளி, 'ஆக்சிஜன் வழங்கப்படவில்லை. இங்கு வழங்கப்பட்ட கருவியும் பயன்படாமல் உள்ளது. ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு கிடைப்பதில்லை,' என கூறுவது போன்ற வீடியோ, சமூகவலைதளத்தில் வைரலானது. சப் - கலெக்டர் பார்வைக்கும் வீடியோவுடன் புகார் வந்தது. இது குறித்து, டாக்டர்களிடம் சப் - கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

சப் - கலெக்டர் கூறியதாவது:
இந்த பிரச்னை தொடர்பாக இருப்பிட மருத்துவ அலுவலரிடம் விசாரிக்கப்பட்டது. வீடியே வெளியிட்டவர், கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டிரைவர் என்பதும், கொரோனா தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்தது.அவரது ஆக்சிஜன் அளவு, 96 ஆக இருப்பதால், ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படாது. அவரது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. நெபுலசைர் வேண்டும் என கேட்டதால் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், நெபுலசைர் வேலை செய்யவில்லை' என, இருப்பிட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். இருந்தாலும், நோயாளிகள் கவனிக்கப்படுவதையும், ஆக்சிஜன் சப்ளை போதுமானதாக இருப்பதையும் உறுதி செய்கிறேன்.

இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X