சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகள் தாக்கியதில் அங்கன்வாடி, வீடுகள் சேதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே, அங்கன்வாடி மற்றும் தொழிலாளர்கள் வீடுகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், சேடல்டேம் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது.அதன்பின்,
 காட்டு யானைகள் தாக்கியதில் அங்கன்வாடி, வீடுகள் சேதம்

வால்பாறை : வால்பாறை அருகே, அங்கன்வாடி மற்றும் தொழிலாளர்கள் வீடுகளை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், சேடல்டேம் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது.அதன்பின், அங்கன்வாடி மையத்தை உடைத்து, சத்துமாவு மூட்டைகளை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

உருளிக்கல் எஸ்டேட் கீழ் பிரட்டு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மற்றொரு யானைகள் கூட்டம், மேரி, தமிழரசி, அருண் ஆகிய மூன்று தொழிலாளர்களின் வீடுகளின் முன் பகுதியை இடித்து சேதப்படுத்தின.அப்போது, வீட்டில் துாங்கி கொண்டிருந்த அனைவரும் பின் பக்கம் வழியாக தப்பி, அருகில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

தகவல் அறிந்து திரண்டு வந்த தொழிலாளர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் யானைகள் இரவு நேரத்தில் முகாமிடுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X