மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புதுப்பிக்கணும்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை : மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் வகையில், தமிழக அரசு, 10 ஆண்டுக்கு முன்பு, அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.அதன் அடிப்படையில், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அதிக அளவில்

உடுமலை : மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் வகையில், தமிழக அரசு, 10 ஆண்டுக்கு முன்பு, அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.அதன் அடிப்படையில், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, அதிக அளவில் பெய்தாலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், உடுமலை நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பள்ளிகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பயன்படாத நிலையில் உள்ளது.அரசு அலுவலகங்களிலுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர் பராமரிப்பு இல்லாமல், குப்பை மூடியும், மண் மூடியும் புதர் மண்டி காணப்படுகிறது.

எனவே, அரசு அலுவலகங்களிலுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கிடைக்கும் மழைநீரை சேகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X