சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 பேருக்கு கொரோனா மூதாட்டி ஒருவர் இறப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், மூதாட்டி ஒருவர் இறந்தார்.பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் காமராஜ் வீதயில், ஒரே வீட்டை சேர்ந்த, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், 77 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.தெற்கு ஒன்றியத்துக்கு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், மூதாட்டி ஒருவர் இறந்தார்.
பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் காமராஜ் வீதயில், ஒரே வீட்டை சேர்ந்த, இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், 77 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கசமுத்திரத்தில் ஒருவருக்கும், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலபுரம், காளியப்பம்பாளையத்தில் தலா, ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி தாலுகாவில், மொத்தம், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் மூதாட்டி ஒருவர் இறந்தார்.

கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில், நேற்று, தொற்று பரவல் இல்லை.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'தடுப்பூசி போட்டாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இன்னும் கொரோனா பரவல் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X