பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி, யூனியன் வளர்ச்சி பணி ஆய்வுக்கூட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: சென்னிமலை பேரூராட்சி, யூனியன் பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி., கணேசமூர்த்தி முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: சென்னிமலை யூனியனில், 22 பஞ்.,கள் உள்ளன. அவற்றுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது.

ஈரோடு: சென்னிமலை பேரூராட்சி, யூனியன் பகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி., கணேசமூர்த்தி முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: சென்னிமலை யூனியனில், 22 பஞ்.,கள் உள்ளன. அவற்றுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை, கருமாண்டிசெல்லிபாளையம் பகுதிக்கு நிரந்தரமான காவிரி குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. தேவையான இடங்களில் புதிதாக குடிநீர் வினியோகம் செய்வது, தரைமட்ட தொட்டிகள் கட்டுவது, வீட்டிணைப்பு வழங்குதல் போன்றவை பரிசீலிக்கப்படும். முருங்கத்தொழுவு பஞ்., ஒட்டன்குட்டையில் ஏற்கனவே உள்ள கிணற்றில் கூடுதல் மோட்டார் அமைத்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னிமலை பகுதியில் குடிநீர் திட்ட தேவை குறித்து கேட்டறிந்து உடனுக்குடன் செயல்படுத்தப்படும். தேவை அடிப்படையில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர். சென்னிமலை சேர்மன் காயத்ரி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X