பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 3.50 லட்சம் லி., தண்ணீர் உறிஞ்சி விற்பனை: அணை பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் குமுறல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அனுமதியை ரத்து செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் மனு வழங்கினர்.கோபி அருகே குண்டேரிபள்ளம் அணையை ஒட்டிய வினோபா நகர், தோப்பூர், கோவிலூர், கவுண்டம் பாளையம், கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, எலூர் பகுதி மக்கள், நேற்று மனு வழங்கி கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில், 150 குடும்பங்கள் வசிக்கிறோம்.

ஈரோடு: ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அனுமதியை ரத்து செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் மனு வழங்கினர்.


கோபி அருகே குண்டேரிபள்ளம் அணையை ஒட்டிய வினோபா நகர், தோப்பூர், கோவிலூர், கவுண்டம் பாளையம், கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, எலூர் பகுதி மக்கள், நேற்று மனு வழங்கி கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில், 150 குடும்பங்கள் வசிக்கிறோம். அப்பகுதியில் சிலர் பெரிய கிணறு தோண்டி, ராட்சத குழாய் மூலம், அதிக மின் திறன் கொண்ட மோட்டாரால் தினமும், 3.50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்று விற்பனை செய்வதாக அறிந்தோம். கோபி ஆர்.டி.ஓ., அனுமதி வழங்கியுள்ளார். அப்பகுதி மக்கள், குறைந்த ஆழத்துடன் போர்வெல், கிணறு அமைத்து வீட்டுக்கும், விவசாயத்துக்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். தினமும், 3.50 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சினால், முற்றிலும் தூர்ந்து வாழ்வாதாரம் பாதிக்கும். இதை கண்டித்து பல போராட்டம் நடத்தியதால், 2019 பிப்., 21ல் திட்ட அனுமதியை ஆர்.டி.ஓ., ரத்து செய்தார். ஆனாலும், நீதிமன்றம் மூலம், சில ஆணை பெற்றுள்ளதாக கூறி தண்ணீர் எடுக்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். கலெக்டர் ஆய்வு செய்து, அனுமதியை முற்றிலும் ரத்து செய்து, தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X