பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக கே.என்.கே., சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. முதலில் வாகன போக்குவரத்து குறைவான இடங்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடங்களில் திட்டப்பணி நடந்தது. இதையடுத்து போக்கு வரத்துள்ள இடங்களில் பணி தொடங்கியுள்ளது. அதன்படி மாநகராட்சி இரண்டாவது மண்டலம், மூலப்பட்டறையில் இருந்து கே.என்.கே., சலையில் கருங்கல்பாளையம் மெயின் சாலை வரை,

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. முதலில் வாகன போக்குவரத்து குறைவான இடங்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடங்களில் திட்டப்பணி நடந்தது. இதையடுத்து போக்கு வரத்துள்ள இடங்களில் பணி தொடங்கியுள்ளது. அதன்படி மாநகராட்சி இரண்டாவது மண்டலம், மூலப்பட்டறையில் இருந்து கே.என்.கே., சலையில் கருங்கல்பாளையம் மெயின் சாலை வரை, மெயின் சேம்பர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக இப்பகுதி சாலை தற்போது ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மூலப்பட்டறை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும், திட்டப்பணி முடியும் வரை, பார்க் சாலை, திருநகர் காலனி வழியாக கருங்கல்பாளையம் செல்ல வேண்டும். கருங்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு வரும் வாகனங்கள் மட்டும், கே.என்.கே., சாலை வழியாக வரலாம். முறையான அறிவிப்பின்றி கே.என்.கே., சாலையை, ஒரு வழிப்பாதையாக மாற்றியதால், விபரம் தெரியாமல் வந்த மக்கள், வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X