நஷ்ட ஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நஷ்ட ஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி

Added : நவ 24, 2021
Share
கோபி: விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால், கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. சத்தியமங்கலம் அருகே வாளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 36, கூலி தொழிலாளி; கடந்த, 2010 மார்ச் 29ல், மொபட்டில் திருப்பூர் ரோட்டில் சென்றபோது அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். நஷ்டஈடு கேட்டு, சத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு

கோபி: விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால், கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. சத்தியமங்கலம் அருகே வாளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 36, கூலி தொழிலாளி; கடந்த, 2010 மார்ச் 29ல், மொபட்டில் திருப்பூர் ரோட்டில் சென்றபோது அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். நஷ்டஈடு கேட்டு, சத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த, 2012 அக்.,30ல், அப்போதைய நீதிபதி கிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழகம், 68 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். வழங்காததால், 2019 ஜன.,ல் கட்டளை நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். கடந்த அக்.,21ல், வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெகநாதன், விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கோபியில் இருந்து மதுரை செல்ல தயாராக இருந்த, அரசு மப்சல் பஸ்சை, நீதிமன்ற பணியாளர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X