சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலையில் பள்ளத்தில் பாய்ந்த லாரி

Added : நவ 24, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில், 100 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து, நெல் மூட்டை ஏற்றிய டாரஸ் லாரி, கும்பகோணத்துக்கு புறப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த டிரைவர் ஜெயராம், 48, ஓட்டினார். லோடு மேன் பச்சையப்பன், 40, உடனிருந்தார். ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நேற்று

புன்செய்புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில், 100 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து, நெல் மூட்டை ஏற்றிய டாரஸ் லாரி, கும்பகோணத்துக்கு புறப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த டிரைவர் ஜெயராம், 48, ஓட்டினார். லோடு மேன் பச்சையப்பன், 40, உடனிருந்தார். ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை வந்தது. இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, 100 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதி நின்றது. டிரைவர் ஜெயராம், பச்சையப்பன் லேசான காயத்துடன் தப்பினர். நெல் மூட்டைகள் பள்ளத்தில் சிதறி விழுந்தன. வாகன ஓட்டிகள், பண்ணாரி சோதனை சாவடி போலீசார், விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. விபத்து குறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X