பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கிய அரசியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பிரதமர் மோடி படம்: பரமக்குடி பட்டதாரி இளைஞர் சாதனை

Added : நவ 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கிருஷ்ணபிரசாத் ஆரோக்கியமான அரசியலை முன்னிறுத்தி, பிரதமர் மோடியின் படத்தை டிஜிட்டல் முறையில் வடிவமைத்துள்ளார்.பரமக்குடி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத், 22. இவர் எம்.பி.ஏ.,முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.பி.பி.ஏ., (லாஜிஸ்டிக்ஸ் அன் ஷிப்பிங் மேனேஜ்மென்ட்) மதுரை சுப்பலட்சுமி
ஆரோக்கிய அரசியல், பிரதமர் மோடி, படம், பரமக்குடி, பட்டதாரி, இளைஞர், சாதனை

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கிருஷ்ணபிரசாத் ஆரோக்கியமான அரசியலை முன்னிறுத்தி, பிரதமர் மோடியின் படத்தை டிஜிட்டல் முறையில் வடிவமைத்துள்ளார்.

பரமக்குடி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத், 22. இவர் எம்.பி.ஏ.,முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.பி.பி.ஏ., (லாஜிஸ்டிக்ஸ் அன் ஷிப்பிங் மேனேஜ்மென்ட்) மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் படித்துள்ளார்.தற்போது கொரோனா காலத்தில் டிஜிட்டல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, பல்வேறு வகையான போட்டோக்களை வடிவமைத்து வருகிறார்.

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்கள், யூனியன் பிரதேசம் உள்ளடக்கி 30 முதல்வர்களின் புகைப்படங்கள், மாநில முக்கிய அமைச்சர்கள் என 540 புகைப்படங்களை ஆர்ட் போர்டில் பிரிண்ட் எடுத்துஉள்ளார்.இதனை 18 அடி அகலம் 30 அடி உயரம் என கணக்கிட்டு, நடுவில் பிரதமர் மோடியின் உருவபடத்தை டிஜிட்டல் முறையில் உருவாக்கியுள்ளார். மேலும் புகைப்படங்களின் வண்ணங்கள் தேசிய கொடியை ஒத்துள்ளபடி உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர் கூறியதாவது: 30 நாட்களுக்குள் தலைவர்களின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் தலைவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் உருவ படத்தை டிஜிட்டல் முறையில் செய்துள்ளேன். மேலும் 540 புகைப்படங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மணி நேரம் 45 நிமிடத்தில் ஒட்டி சேர்த்துள்ளேன். இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தின்பார்வைக்கு அனுப்பி உள்ளேன். அவர்கள் இதனை அங்கீகரிக்கும் பட்சத்தில் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
24-நவ-202123:36:10 IST Report Abuse
S. Narayanan Very good
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
24-நவ-202115:53:09 IST Report Abuse
selva வேற நல்ல வேலை இல்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X