சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே விட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் பலியானான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியை ஒட்டிய வெங்கடாபுரத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், ஆகாஷ் என்கின்ற 16 வயது மகனும், சுனில் என்கின்ற 11 வயது மகனும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள

கரூர்: கரூர் அருகே விட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் பலியானான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியை ஒட்டிய வெங்கடாபுரத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், ஆகாஷ் என்கின்ற 16 வயது மகனும், சுனில் என்கின்ற 11 வயது மகனும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அருகில் உள்ள கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். மண் சுவரில் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில், வீட்டின் வடக்கு மற்றும் மேற்கு பக்க சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் மற்றும் மேற்கூரை விழுந்தது. இதில் அவர்களது இளையமகன் சுனில் சுவற்றுக்கு அடியில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மூத்த மகன் ஆகாஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். பெற்றோருக்கு காயங்கள் ஏதும் இல்லை.
இதை தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்டனர். உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், மற்றொரு சிறுவனை சிகிச்சைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பசுபதிபாளையம் போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X