பொது செய்தி

தமிழ்நாடு

சங்கடஹர சதுர்த்தியில் கோவில்களில் சிறப்பு பூஜை

Added : நவ 24, 2021
Share
Advertisement
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி.ரோடு சாலைவிநாயகர் கோவிலில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூலவர் விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட்

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி.ரோடு சாலைவிநாயகர் கோவிலில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூலவர் விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, 608 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X