பொது செய்தி

தமிழ்நாடு

முத்தூர் தடுப்பணையில் இருந்து பாசன கால்வாயில் நீர் திறப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
காங்கேயம்: ஆத்துப்பாளையம் தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், 2ம் முறையாக சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து மழை நீர் திறக்கப்பட்டுள்ளது.நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்துார் பகுதியில் தடுப்பணை
முத்தூர் தடுப்பணையில் இருந்து பாசன கால்வாயில் நீர் திறப்பு

காங்கேயம்: ஆத்துப்பாளையம் தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், 2ம் முறையாக சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து மழை நீர் திறக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்துார் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் குளத்துக்கும், ஊட்டுக்கால்வாய் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 3வது ஆண்டாக, கடந்த 7ம் தேதி ஊட்டுக்கால்வாய் வழியாக 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து கார்வழி அருகே உள்ள அணைப்பாளையம் அணை நிரம்பியது. இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூர் தாலூக்காவில் உள்ள பாசன நிலங்களுக்கு கடந்த 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 2ம் முறையாக, முத்துார் தடுப்பணையில் 16 அடிக்கு தேக்கப்பட்டு, ஊட்டுக்கால்வாய் வழியாக 200 கன அடி வீதமும், நொய்யல் ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு செல்கிறது. நொய்யல் ஆற்று வெள்ளநீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X