சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்த மத்திய குழுவினர், இன்று (நவ.,24) முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது; பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. மேலும், பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. சேதங்களை பார்வையிட, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் 6 பேர் குழு இரண்டு பிரிவாக பிரிந்து, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மத்திய குழுவினர் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனையில் வெள்ள சேதங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டில்லி சென்று மத்திய அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு மழை, வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE