சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்; இருவருக்கு வலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், சீத்தாராம்மேடு மாருதி நகரை சேர்ந்தவர் சேகர், 61. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்; இவரும், உத்தனப்பள்ளி அடுத்த அகரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் நண்பர்கள். கடந்த மாதம் சேகர் தொழில் ரீதியாக ராதாகிருஷ்ணனிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் வாங்கினார். அதை திரும்ப வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த, 19ல் காலை பணத்தை தருமாறு

ஓசூர்: ஓசூர், சீத்தாராம்மேடு மாருதி நகரை சேர்ந்தவர் சேகர், 61. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்; இவரும், உத்தனப்பள்ளி அடுத்த அகரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரும் நண்பர்கள். கடந்த மாதம் சேகர் தொழில் ரீதியாக ராதாகிருஷ்ணனிடமிருந்து, 10 லட்சம் ரூபாய் வாங்கினார். அதை திரும்ப வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கடந்த, 19ல் காலை பணத்தை தருமாறு ராதாகிருஷ்ணன் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் அக்பர் ஆகியோர் சேர்ந்து, சேகரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, ராதாகிருஷ்ணன் மற்றும் அக்பரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X