சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் தேங்காய் நார் நிறுவனத்தில் தீ விபத்தில் ரூ.25 லட்சம் நாசம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: தனியார் தேங்காய் நார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில், மெத்தைக்கு பயன்படுத்தப்படும், தேங்காய் நார் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு நேற்று மாலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்கசிவால் நார் மற்றும் பொருட்கள் தீயில் கருக

ஓசூர்: தனியார் தேங்காய் நார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில், மெத்தைக்கு பயன்படுத்தப்படும், தேங்காய் நார் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு நேற்று மாலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின்கசிவால் நார் மற்றும் பொருட்கள் தீயில் கருக துவங்கின. தகவலின்படி வந்த ஓசூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக தீயை அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், நிறுவனத்திலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பின. இந்த தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின என, சிப்காட் போலீசார் தெரிவித்தனர். நிறுவன மேலாளர் ஹரிசுரேஷ் புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X