பொது செய்தி

தமிழ்நாடு

கெலமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், சந்தனப்பள்ளி பஞ்., அலுவலகத்தில், 2016-17ல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வந்த பணம் ஏமாற்றப்பட்டதாகவும், கழிப்பிடம் கட்ட ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்து விட்டதாகவும், மா.கம்யூ., கட்சியினர் குற்றம் சாட்டினர். வீடுகள் கட்டாமல் வீடு கட்டியது போல் பில் எடுத்து முறைகேடு செய்துள்ளதால் உரிய அதிகாரி மீது நடவடிக்கை

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், சந்தனப்பள்ளி பஞ்., அலுவலகத்தில், 2016-17ல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வந்த பணம் ஏமாற்றப்பட்டதாகவும், கழிப்பிடம் கட்ட ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்து விட்டதாகவும், மா.கம்யூ., கட்சியினர் குற்றம் சாட்டினர். வீடுகள் கட்டாமல் வீடு கட்டியது போல் பில் எடுத்து முறைகேடு செய்துள்ளதால் உரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த அக்., 2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் மனு வழங்கப்பட்டது. உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில், கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை, நேற்று கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X