பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: சாமாண்டப்பட்டி விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில், கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: போச்சம்பள்ளி, சாமாண்டப்பட்டி ஏரி நீரை நம்பி, 450 ஏக்கர் நிலம் கடந்த, 15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு தரிசு நிலமாக உள்ளது. மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடக்கிறது. கடந்த, 15 ஆண்டுகளாக சரியான

கிருஷ்ணகிரி: சாமாண்டப்பட்டி விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில், கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: போச்சம்பள்ளி, சாமாண்டப்பட்டி ஏரி நீரை நம்பி, 450 ஏக்கர் நிலம் கடந்த, 15 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு தரிசு நிலமாக உள்ளது. மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடக்கிறது. கடந்த, 15 ஆண்டுகளாக சரியான பருவமழையின்றி நிலத்தடி நீர்மட்டம், 1,000 அடிக்கு கீழ் சென்றது. வாடமங்கலம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றுக்கு, 1.5 கி.மீ., தூரமும், வாடமங்கலம் ஏரி, 830 மீ., தூரமும் உள்ளது. இவ்வளவு அருகில் நீர் ஆதாரம் இருந்தும் எங்கள் ஊரில் இருக்கும், 30 ஏரிகள் கடந்த, 30 ஆண்டுகளாக வறண்டுள்ளன. கடந்த, 20 ஆண்டுகளாக தென்பெண்ணையாற்று நீரை நீரேற்று முறையில் சாமாண்டப்பட்டியிலுள்ள ஏரியில் நிரப்பி, ஏரியை சுற்றியுள்ள கிணறுகளில் ஊரும் நீரை கொண்டு விவசாயம் செய்ய வழிவகை செய்தால், அனைத்து நிலங்களும் பயன்பெறும். வாடமங்கலம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் இருந்தோ, வாடமங்கலம் ஏரி உபரிநீரை, சிறிய உறை கிணறு அமைத்தோ, சூரிய மின்சக்தி மூலம் மின்மோட்டாரை இயக்கி, சாமாண்டப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X