பொது செய்தி

தமிழ்நாடு

4 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாருப்பள்ளியில், சித்தேகவுடு ஏரி உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த, 2017 செப்.,ல் பெய்த கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்றது. அதன் பின் மழையின்றி ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதித்தது. விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாருப்பள்ளியில், சித்தேகவுடு ஏரி உள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் மூலம் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த, 2017 செப்.,ல் பெய்த கனமழையால் ஏரி நிரம்பி மறுகால் சென்றது. அதன் பின் மழையின்றி ஏரிக்கு நீர்வரத்து இல்லை. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதித்தது. விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் இருந்தே மாருப்பள்ளியில் கனமழை பெய்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. நேற்று காலை ஏரி முழு கொள்ளளவை எட்டி மறுகால் சென்றது. இதனால், விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, மலர் தூவி பூஜை செய்தனர். சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏரிக்கு வந்து, தண்ணீர் வெளியேறுவதை பார்த்து சென்றனர். இந்த ஏரியில் மறுகால் செல்லும் தண்ணீர், அப்பகுதியிலுள்ள சாலையை கடந்து செல்வதால், குனிக்கல், தாசயனதொட்டி ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால், பெட்டப்பள்ளி வழியாக, 10 கி.மீ., சுற்றிக்கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சென்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X