சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த சிறுவன் புகழ். வயது 9. இவன் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 19ம் தேதி இவனை காணவில்லை என, அவரது பெற்றோர் தேடி வந்தனர். இதுகுறித்து

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த சிறுவன் புகழ். வயது 9. இவன் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 19ம் தேதி இவனை காணவில்லை என, அவரது பெற்றோர் தேடி வந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.,24) அதே பகுதியில் உள்ள துரைசாமி என்பவரது 10 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் காணாமல்போன பள்ளி மாணவன் புகழ் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த போலீசார் சிறுவன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X