பொது செய்தி

இந்தியா

வேளாண் சட்டங்கள் வாபஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இன்று (நவ.,24) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைகளில் சுமார் ஓராண்டாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாய
FarmLaws, Repeal, Cabinet Approved, PMModi, வேளாண் சட்டங்கள், வாபஸ், திரும்ப பெறுதல், மத்திய அமைச்சரவை, ஒப்புதல், பிரதமர், மோடி

புதுடில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இன்று (நவ.,24) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைகளில் சுமார் ஓராண்டாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து கடந்த 19ம் தேதி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், வரும் 29ம் தேதி துவங்கவுள்ள பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டில்லியல் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.ஏழைகளுக்கு மாதந்தோறும், ரேசனில் இலவச பொருட்கள் வழங்குவது 2022 மார்ச் மாதம் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 கோடி பேர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-நவ-202122:30:48 IST Report Abuse
Kasimani Baskaran அடிமைகள் கூட்டம் இன்று ஓவராக ஆடுகிறது. முதலில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் தமிழரல்லாத திராவிட வந்தேறிகளை விரட்ட வேண்டும். அதன் பின் தமிழகம் சுத்தமான இடமாக ஆகிவிடும்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-நவ-202122:13:38 IST Report Abuse
R. Vidya Sagar மந்திரி சபை தீர்மானம் எடுக்கும் முன்னரே எப்படி பெரியவர் அதை அறிவித்தார்?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-நவ-202121:29:30 IST Report Abuse
Rasheel விவசாயிகளுக்கு படிப்பறிவு இல்லை. மொத்த உள்நாட்டு விவசாய உற்பத்தியில் 4% மட்டுமே அரசாங்கம் விலை கொடுத்து வாங்குகிறது. மீதம் 96% தனியாரால் மட்டுமே வாங்கப்படுகிறது. எனவே அனைத்து விவசாய பொருளையும் அரசாங்கம் வாங்க வேண்டும் என்பது முடியாது. அதற்கு பணம் கிடையாது. விவசாயிகளிடம் ITC, Lever, Aachi, amul போன்ற நல்ல நிறுவனங்கள் முதலிலேயே ஒப்பந்தம் போட்டு நல்ல விலைக்கு வாங்குகின்றன. அதில் மண்ணை வாறி போட்டு இடை தரகர்கள், மண்டி மூலம் குறைந்த அடிமாட்டு விலைக்கு விற்க விவசாயிகள் ஆடு போல தலையை குடுத்து விட்டார்கள். இதனால் அவர்களுக்கு தான் நஷ்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X