கோவிட்டால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம்: ராகுல் கோரிக்கை

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட்டால் இறந்தவர்கள் குறித்த தகவல்களை முறையாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கோவிட்டால் இறந்தவர்கள் குறித்த தகவல்களை முறையாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் காரணமாக இறந்தவர்கள் குறித்த நம்பகத்தகுந்த தகவல்களை அரசு வழங்க வேண்டும். அதேபோல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மக்களின் வேதனையை அரசு குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குஜராத் மாடல் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர், கேவிட் காலத்தில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் நீங்கள் அங்கு இருக்கவில்லை. 10 முதல் 15 லட்ச ரூபாய் பணம் மற்றும் உறவினர்களை இழந்த போதும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. என்ன மாதிரியான அரசு உள்ளது. குஜராத்தில், கோவிட் காரணமாக 10 ஆயிரம் பேர் மட்டுமே இறந்ததாக மாநில அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக சென்று, இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இன்றைய குஜராத் மாடலில், கோவிட்டால் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. புதிய விமானம் வாங்க பிரதமரிடம் ரூ.8,500 கோடி உள்ளது. ஆனால், உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை. கோவிட் காலகட்டத்தில், சில தொழிலதிபர்களிடம் நாடு ஒப்படைக்கப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்பிற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது.


latest tamil news
ஆனால், கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கோவிட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malarvizhi - Hyderabad,இந்தியா
25-நவ-202110:00:16 IST Report Abuse
Malarvizhi இவ்வளவுதானா? தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ருபாய் ஒரு கோடி கொடுக்கவேண்டும் என்று சொன்னார் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது. தனது ஆட்சியில் அதனை நிச்சயம் கொடுப்பார் பொறுத்திருங்கள்.
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
25-நவ-202104:00:55 IST Report Abuse
Mahesh ஏன்,விபத்தில் இறந்தவர்கள், மலேரியாவில் இறந்தவர்கள், மாரடைப்பால் இறந்தவர்கள் என பல வழிகளில் மக்கள் உயிர் பறிபோகிறது... இந்தியாவில் யார் இறந்தாலும் அவர் குடும்பத்திற்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுங்களேன்??
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-நவ-202123:07:10 IST Report Abuse
spr இது அறிவீனம் இதே கோரிக்கை தொடர்ந்தால் நாட்டில் அன்றாடம் இறக்கும் ஒவ்வொருவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென்று அடுத்த கோரிக்கை முன்னெடுக்கப்படும் ஏற்கனவே அரசியல் கட்டாயத்தால் நம் மாநிலம் உட்பட பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தரப்படுகிறது இதனால் இடைத்தரகர்களாக செயல்படும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைவரும் பயனடைகிறார் என்பது நடைமுறை உண்மை ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பதனை அறிந்த ராகுல் இது போல இன்னும் பல குதர்க்கமான அரசுக்கு நிர்பந்தம் தரும் கோரிக்கைகளை முன்வைப்பாரென்று தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X