பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 2,000 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை, 2,146 கன அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பால், தென்பெண்ணையாற்றில் நேற்று வினாடிக்கு, 2,260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 2,000 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை, 2,146 கன அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பால், தென்பெண்ணையாற்றில் நேற்று வினாடிக்கு, 2,260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த, 19ல் முதல், ஐந்தாவது நாளாக தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு, 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் எனவும், வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், ஆடு, மாடு கழுவ, துணி துவைக்க ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X