அமெரிக்கா தலைமையில் ஜனநாயக மாநாடு: தைவானுக்கு அழைப்பு: சீனா புறக்கணிப்பு

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன்: ஜனநாயகம் தொடர்பாக ஆன்லைனில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, சீனாவை அழைக்கவில்லை.அமெரிக்கா தலைமையில் ஜனநாயகம் மாநாட்டை அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கான சவால்கள், வாய்ப்புகள் அதனை எதிர்கொள்ளுதல், ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த
அமெரிக்கா,ஜனநாயக மாநாடு, தைவான், சீனா, புறக்கணிப்பு

வாஷிங்டன்: ஜனநாயகம் தொடர்பாக ஆன்லைனில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, சீனாவை அழைக்கவில்லை.

அமெரிக்கா தலைமையில் ஜனநாயகம் மாநாட்டை அடுத்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கான சவால்கள், வாய்ப்புகள் அதனை எதிர்கொள்ளுதல், ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


latest tamil newsவீடியோ கான்பரன்சிங் முறையில், அதிபர் பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தைவானை அழைத்துள்ள அமெரிக்கா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:22:36 IST Report Abuse
J.V. Iyer ஆஹா ஆரம்பித்துவிட்டார் ஆட்டத்தை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202103:55:40 IST Report Abuse
NicoleThomson சீனா , அமேரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம் , ஒரு நாடு கம்யுநசிம் என்ற போர்வை மற்ற மூன்றும் மதத்தை பரப்பும் தீவிரவாதிகள் அப்புறம் எப்படி சார் ஜனநாயகம்?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-நவ-202101:34:29 IST Report Abuse
மலரின் மகள் இரசியா, சீனா, துருக்கியை புதிய பனிப்போரின் புதிய துருவமாக பார்க்கிறது அமெரிக்கா. இந்த கூட்டணியில் பாகிஸ்தான் இருந்தாலும் அமெரிக்காவை அவர்களால் எதிர்க்க இயலாது, அவர்களுக்கு எதிராக செயலாற்ற முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பின்னணியில் பெரியண்ணன் இருந்தார் என்றும், அவர்களை உருவாக்கியதே பெரியண்ணன் என்றும் சொல்கிறார்கள். பாகிஸ்தானும், ஈரானும் துருக்கியின் ஆதரவில் இருக்கின்றன. வடகொரியா சீனாவின் ப்ராக்சியாக இருக்கிறது. மற்றபடி பல ஆப்ரிக்காவின் வலிமை குன்றிய தேசங்கள் சீனாவின் சொல்படி கேட்க அடிமை பட்டிருக்கின்றன. இலங்கையும் பங்களா தேசமும் அமெரிக்காவின் பார்வையில் சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டன. அமெரிக்க புதிய கூட்டணியை உருவாக்க முயல்கிறது, இந்தியாவை ஆசியாவில் முன்னிறுத்துகிறது. நமக்கோ தெளிவான தீர்வை முடிவை எடுக்க இயலாமல் சூழல். இரசியா நமக்கு நண்பன், அவர்களின் பொருளாதார மற்றும் மாறுபடும் உலக சூழலில் அவர்கள் சீனாவுடன் இணைந்திருக்கவேண்டிய நிலை, ஆகையால் நாம் அந்த கூட்டணியில் பெறமுடியாது. இரசியாவை மட்டும் ஏற்கவேண்டியதாக இருக்கிறது. அதே சமயம் சீனாவின் தொல்லையால் நமக்கு அமெரிக்கா தேவை படுகிறது. அமெரிக்காவை முழுமையாக நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விட முடியாது. ஆகவே நாம் அவர்களின் முழு ஆதரவு நிலை பாட்டை எடுத்து அவர்களின் கூட்டணியில் சேர முடியாது. நட்பு நாடாக அவர்களின் சில ராணுவ தளவாடங்களை மலைப்பகுதியில் தேவைப்படும் தளவாடங்களை வாங்குவதற்கு நாம் அவர்களின் சில கூட்டாளிகளாக இருக்க வேண்டிய நிலை. நமது ஆயுத தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளும் பொது நமக்கு அமெரிக்காவின் தயவு தேவையிராது. ஐப்ரோப தேசத்துடன் நமது கூட்டணி பலம் பெறுவது சிறப்பு அதை தான் மோடி அரசு செய்கிறது. அங்குள்ள முக்கிய தேசங்களாக பிரான்ஸ் ஜெர்மன் நமக்கு நல்ல நட்புறவை தருகிறது. ஆயுதங்களை இங்கு உற்பத்தி செய்வதற்கும் தொழிற்முறை பங்காளிகளாகவும் இருக்கிறது. அவர்களை முழுமையாக ஏற்கிறோம் நாம். பாகிஸ்தான் ஒரு ரெஸ்ட்லெஸ் நிலையிலே தொடந்து இருக்கிறது. இந்தியாவுடன் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களால் முன்னேற்றம் காண முடியும் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கொஞ்சம் சீனாவை விட்டு விளக்கவேண்டிய சூழல் இருக்கிறது. உள்நாட்டிலேயே சீனாவால் சிக்கல் உருவாகி இருக்கிறது. துருக்கியை விட்டு விலகி சவூதி பக்கம் சாய்கிறது. அப்படையும் இப்படியும் மாறி மாறி முயற்சி செய்கிறது அந்த தேசம். அதிகம் பாட்டால் தான் தெரியும் அவர்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X