பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யாவிற்கு எதிராக போராடினால் அரை பவுன் தங்கக்காசு - வன்னியர் சங்க மாநில நிர்வாகி அறிவிப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: 'நடிகர் சூர்யா உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தும் நபர்களுக்கு, அரை பவுன் தங்கக்காசு பரிசு வழங்கப்படும்' என்று, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணை பெற்று 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், குருவையும் கேவலப்படுத்தியதாக

தஞ்சாவூர்: 'நடிகர் சூர்யா உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தும் நபர்களுக்கு, அரை பவுன் தங்கக்காசு பரிசு வழங்கப்படும்' என்று, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.


மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணை பெற்று 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், குருவையும் கேவலப்படுத்தியதாக ஜெய்பீம் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை கைது செய்யக் கோரியும், தஞ்சாவூரில் நேற்று வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை பொறுக்க முடியாது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த மாதம், 23ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும் இளைஞர்களையும் திரட்டி, அக்னி குண்டத்தில், நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்தப்படும். அப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு, அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் காசு டாலர் வழங்கப்படும். அதேபோல் நடிகர் சூர்யா வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தால், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி, சாணிப்பாலால் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X