சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கோழி பண்ணை திட்ட மோசடி: 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில், மோசடி செய்த, பெண் உள்பட இருவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் நம்பியூரில், 'ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்' பெயரில், நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம், 2011 - 12ல் இயங்கியது. கார்த்திகா, 32, அவரது கணவர் மணிகண்டன், 27, முருகன், 31, பிரபு, 30. சதீஷ், 25, ராமசாமி, 55, ஜெய சாமுண்டீஸ்வரி, 49, ராஜேந்திரன், 49, ஆகியோர் விளம்பரம் செய்தனர். பல்வேறு

ஈரோடு: நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில், மோசடி செய்த, பெண் உள்பட இருவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம் நம்பியூரில், 'ஹெல்த்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்' பெயரில், நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம், 2011 - 12ல் இயங்கியது. கார்த்திகா, 32, அவரது கணவர் மணிகண்டன், 27, முருகன், 31, பிரபு, 30. சதீஷ், 25, ராமசாமி, 55, ஜெய சாமுண்டீஸ்வரி, 49, ராஜேந்திரன், 49, ஆகியோர் விளம்பரம் செய்தனர். பல்வேறு வகையில் கவர்ச்சிகர விளம்பரங்கள் வெளியிடவே, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தனர். ஒப்பந்த காலம் முடியும் முன்பே, 99 முதலீட்டாளர்களின், ஒரு கோடியே, 55 லட்சம் ரூபாயை ஏமாற்றி தலைமறைவாகினர். இது தொடர்பாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில், 2012 டிச.,12ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார். கார்த்திகா, பிரபு ஆகிய இருவருக்கும், தலா, 10 ஆண்டு சிறை தண்டனை, இருவரும் சேர்த்து, ஒரு கோடியே, 65 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X