சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 10 நாட்களில் வங்கி ஊழியர் மனைவி சாவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: திருமணமான, 10 நாட்களில் வங்கி ஊழியர் மனைவி இறந்தது குறித்து, ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஈங்கூர், கொங்கு நரை சேர்ந்த மனோகரன் மகள் சவுமியா, 25; மொடக்குறிச்சி அருகேயுள்ள நன்செய் ஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இருவருக்கும் கடந்த, 11ல் திருமணம் நடந்தது. காரைக்குடியில் தேசிய வங்கியில் பிரவீன்குமார் பணிபுரிகிறார். கடந்த, 21ம் தேதி

ஈரோடு: திருமணமான, 10 நாட்களில் வங்கி ஊழியர் மனைவி இறந்தது குறித்து, ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஈங்கூர், கொங்கு நரை சேர்ந்த மனோகரன் மகள் சவுமியா, 25; மொடக்குறிச்சி அருகேயுள்ள நன்செய் ஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இருவருக்கும் கடந்த, 11ல் திருமணம் நடந்தது. காரைக்குடியில் தேசிய வங்கியில் பிரவீன்குமார் பணிபுரிகிறார். கடந்த, 21ம் தேதி புதுமண தம்பதி, இரு வீட்டாரும், மானூர் கிராமத்தில் உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று திரும்பினர். சவுமியாவுக்கு நள்ளிரவில் தொடர் இருமல் வந்தது. தண்ணீர் குடித்தபோது மயங்கி விழவே, அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கவே அங்கு விரைந்தனர். அரசு டாக்டர்கள் பரிசோதனையில், சவுமியா ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சவுமியாவின் தந்தை புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். அதேசமயம் ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X