பொது செய்தி

தமிழ்நாடு

15 லட்சம் டன் அரிசி, கோதுமை கொரோனா ஊரடங்கில் வழங்கல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: ''ஈரோடு, சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு, 15 லட்சம் டன் அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்பட்டுள்ளது,'' என, இந்திய உணவு கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் தெரிவித்தார்.மத்திய அரசின் ஆசாத் கா அம்ரூத் மகோத்சவ் திட்டத்தில், அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி தலைமை

ஈரோடு: ''ஈரோடு, சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு, 15 லட்சம் டன் அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்பட்டுள்ளது,'' என, இந்திய உணவு கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் தெரிவித்தார்.


மத்திய அரசின் ஆசாத் கா அம்ரூத் மகோத்சவ் திட்டத்தில், அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி தலைமை வகித்தார். இதில் இந்திய உணவு கழக கோவை கோட்ட மேலாளர் ராஜேஷ் பேசியதாவது: இந்திய உணவு கழகம் சார்பில், கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அரிசி, கோதுமை வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கின்போது, உணவு பாதுகாப்பு நலத்திட்டம் அறிமுகமானது. ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு, ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. கோவை கோட்டத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஆறு லட்சத்து, 2,600 டன் அரிசி, 37 ஆயிரத்து, 688 டன் கோதுமை மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2021ம் ஆண்டு பொது வினியோக முறை திட்டத்தில், 8 லட்சத்து, 69 ஆயிரத்து, 937 டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டது. இவ்வாறாக கொரோனா ஊரடங்கு காலத்தில், 15 லட்சத்து, 10 ஆயிரத்து, 225 டன் அரிசி, கோதுமை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரத்தசோகை, நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இதில் போலிக் அமிலம், இரும்பு சத்து, வைட்டமின் பி12 சத்துகள் அதிகமாகும். இந்த மாதத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு, ?,663 டன் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X