பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
கரூர்: க.பரமத்தியில், வீட்டு மனைகளை முறைப்படுத்த, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சக்திவேல், 45; இவர் க.பரமத்தியில் நான்கு வீட்டுமனைகளை, மனைவி பெயரில் முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலு, 45, என்பவரிடம் மனு அளித்தார்.

கரூர்: க.பரமத்தியில், வீட்டு மனைகளை முறைப்படுத்த, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சக்திவேல், 45; இவர் க.பரமத்தியில் நான்கு வீட்டுமனைகளை, மனைவி பெயரில் முறைப்படுத்தி வழங்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலு, 45, என்பவரிடம் மனு அளித்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால், சக்திவேல் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த, 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நேற்று மாலை சக்திவேல், க.பரமத்தி பஞ்., யூனியன் அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலுவிடம் அளித்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் சால்வன் துரை தலைமையிலான போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலுவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X