பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள் குறைய ஸ்டேஷனில் கிடா வெட்டிய போலீசார்

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் குறைய வேண்டி, போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி விருந்து பரிமாறப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. இதில், தளி போலீஸ் எல்லையில், கடந்த, 15ல், மஞ்சுநாத் என்பவரும்,

ஓசூர்: தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் குறைய வேண்டி, போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி விருந்து பரிமாறப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளன. இதில், தளி போலீஸ் எல்லையில், கடந்த, 15ல், மஞ்சுநாத் என்பவரும், தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரத்தில், ரவுடி சுரேஷ் என்பவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். நொகனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், நேற்று முன்தினம் லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதுதவிர, வழிப்பறி, ஆள் கடத்தல், திருட்டு, அடிதடி போன்ற வழக்குகள் அதிகமாக நடக்கின்றன. குற்ற வழக்குகள் குறைய, ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில், நேற்று காலை கிடா வெட்டி பூஜை செய்து, அருகிலுள்ள வனத்துறை விருந்தினர் விடுதியில், அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என முக்கிய அதிகாரிகள் மட்டும் அழைக்கப்பட்டனர். இது, மேல்மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. பூஜையில் பங்கேற்ற போலீசார், அசைவ விருந்தை ருசித்தனர். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X