சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நின்றிருந்த லாரி மீது கார் மோதல்: புதுமாப்பிள்ளை பலி; 3 பேர் காயம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: நின்றிருந்த லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில், புது மாப்பிள்ளை உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசலு, 38; இவருக்கும் சென்னையை சேர்ந்த கனிமொழி, 32, என்பவருக்கும் கடந்த, 21ல் பெங்களூருவில் திருமணமானது. புது மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் தன்

கிருஷ்ணகிரி: நின்றிருந்த லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில், புது மாப்பிள்ளை உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.


கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசலு, 38; இவருக்கும் சென்னையை சேர்ந்த கனிமொழி, 32, என்பவருக்கும் கடந்த, 21ல் பெங்களூருவில் திருமணமானது. புது மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு நேற்று முன்தினம் தன் ஹூண்டாய் ஐ10 காரில், பெங்களூருவிலிருந்து சென்னையிலுள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். காரை சீனிவாசலு ஓட்டினார். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சுண்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே நேற்று அதிகாலை, 12:10 மணிக்கு, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சீனிவாசலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன்வந்த மனைவி கனிமொழி படுகாயமடைந்தார். உறவினர்கள் சுமலதா, 30, ரிஷிகா, 21 ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். லாரி ஓட்டுனர் அருணாசலத்திடம் கந்திக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X