பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில், 10 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்தும், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், 400 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு

நாமக்கல்: நாமக்கல்லில், 10 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்தும், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், 400 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மழை காரணமாக அவை கிடங்குக்குள் வைத்து ஏலம் விடப்பட்டன. ஆர்.சி.?ஹச்., ரகம் குவிண்டால், 6,499 முதல், 8,989 ரூபாய்; சுரபி ரகம், 9,002 முதல், 9,999 ரூபாய் வரை என, 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X